Sunday, February 1, 2026

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 85 வது மாதாந்திர கூட்டம் நடைபெற்றது !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 85-வது மாதாந்திர கூட்டம் கடந்த 12/02/2021 ZOOM-APP எனும் காணொளி மூலம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : சகோ. அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. நிஜாமுதீன் ( ஆலோசகர் )

சிறப்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )

அறிக்கை வாசித்தல் : சகோ. P.இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )
நன்றியுரை : சகோ. A. சாதிக் அகமது ( இணைத்தலைவர் )

தீர்மானங்கள்:
1) இன்ஷா அல்லாஹ் இம்மாதம் இறுதிக்குள் ரியாத் பைத்துல்மால் பொறுப்புதாரி ஒருவரின் சார்பாக ஒரு தையல்மிஷின் பைத்துல்மால் மூலம் தேர்வு செய்யப்பட்ட நமதூர் ஆதரவற்ற ஒரு ஏழை குடும்பத்திற்கு அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வண்ணம் அன்பளிப்பாக வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
2) ரியாத் கிளை சார்பாக முதல் முறையாக 35 நபர்களுக்கான ஆதரவற்ற ஏழைகளின் திட்டமான பெண்களின் பென்ஷன் திட்டத்தில் பங்கீடு வழங்குவதென உறுதியளித்து மேலும் அத்திட்டத்தில் மிகவும் நலிவடைந்த ஆதரவற்ற ஆண்களையும் இணைப்பது விஷயமாக தலைமையக்கத்துடன் ஒத்துழைப்பு அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது. . அதற்கான ஆதரவும் பொருளாதார உதவியும் செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்காக நன்றி தெரிவிக்கப்பட்டது.

3) பைத்துல்மாலின் சேவை திட்டத்தின் தார்பாய், கல்வித்தொகை, மருத்துவ உதவி, திருமண உதவி போன்ற பல சேவைகள் தொடர்ச்சியாக திறம்பட செயல்படுவதற்காக முழு ஒத்துழைப்பும் ஆதரவும் அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

4) பைத்துல்மாலின் மருத்துவத்திட்டமான டயாலிசிஸ் ( சிறு நீராக கோளாறு ) கேன்சர் போன்ற கொடிய நோய்களின் மருத்துவ உதவிக்கான நிதியின் பற்றாக்குறை மற்றும் தேவையினை தலைமையகம் மூலம் வந்த தகவலை மீண்டும் இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டு அதற்கான நிதி உதவும் நபர்கள் ரியாத்கிளை மூலமோ அல்லது தலைமையகம் மூலமோ நிதி உதவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் இவ்வருட மெகா கூட்டமான ( இஃப்த்தார் நிகழ்ச்சியை ) இக்காலத்தின் சூழ்நிலைக்கேற்ப நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அடுத்த கூட்டத்தில் தீர்மானிப்பது என முடிவு செய்யப்பட்டது.

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த 86-வது அமர்வு மார்ச் 12ம் தேதி நடைபெறும். காணொளிமூலமோ அல்லது நேரடியாகவோ இதைப்பற்றிய முழுவிபரம் பின்னர் அறிவிக்கப்படும், அதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img