Sunday, December 14, 2025

துரைமுருகனுக்கு கொரோனா.. 2 டோஸ் தடுப்பூசி போட்ட நிலையிலும் தொற்று உறுதி!

spot_imgspot_imgspot_imgspot_img

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்.

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்த நிலையிலும் துரைமுருகனுக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கவனிக்கத் தக்கதாக இருக்கிறது.

தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவருக்கும் கொரோனா நோய் தொற்று வராது என்று உறுதியாகக் கூறிவிட முடியாது ஒருவேளை நோய் தொற்று ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு சிறிய அளவுக்கு இருக்கும் என்று சமீபத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தது இந்த நேரத்தில் நினைவு கூறத்தக்கது.

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டசபை தொகுதிகள் போட்டியிடுகிறார் துரைமுருகன். இதையொட்டி அவர் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார் . எனவே பொதுமக்களை அதிக அளவுக்கு சந்திக்க வேண்டியதாக இருந்தது. கட்சி நிர்வாகிகளையும் சந்திக்க வேண்டியதாக இருந்தது.

85 வயதானவர் துரைமுருகன் என்பதால் முன்னெச்சரிக்கையாக அவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் . மொத்தம் இரண்டு டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் தேர்தல் முடிந்த நிலையில் திமுகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொரோனா சோதனை மேற்கொண்டனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் சோதனை செய்து கொண்டார். இதேபோல துரைமுருகன் சோதனை செய்ததில் துரைமுருகனுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் அற்ற வகையில் நோய்த் தொற்று இருப்பதாக கூறப்படுவதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

அதேநேரம் ஸ்டாலினுக்கு நோய் தொற்று இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது. துரைமுருகனுடன் பழகியவர்கள் அனைவரும் தங்களுக்கு பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்களை இப்போதே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். முழு கவச உடையுடன் தேர்தல் நாளில் அவர் ஓட்டு போட்டார். 5 நாட்களுக்குள் அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல துரைமுருகன் விரைவாக குணமடைய தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...
spot_imgspot_imgspot_imgspot_img