Thursday, March 26, 2026

அதிரையின் ஆளுமை MMS தாஹிரா அம்மாள் – ஹாஜா கனி புகழாரம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொள்வதற்க்காக தமுமுகவின் ஹாஜா கனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்விற்கு நகர சேர்மன் MMS தாஹிரா அம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாவட்ட ஆட்சியர்,பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மேடையில் வீற்றிருக்க ஹாஜா கனி பேசுகையில், உலகமே ஹிஜாபுக்கு ஆதரவாக கருத்திடும் இத்தருணத்தில் மேடையில் அமர்ந்திருக்கும் சகோதரி தாஹிரா அம்மாள் கலாச்சாரத்தின் கேடயமாக துப்பட்டி அணிந்து அமர்ந்திருப்பது உண்மையில் மெச்சதக்கது என்றார்.

இடத்திற்கு ஏற்ப கலாச்சாரங்களை மாற்றிக்கொள்ளூம் இக்காலத்தில் கூட மரபை மாறாத அதிராம்பட்டினத்தில் இந்த காட்சி தம்மை மெய்சிலிர்க்க வைத்ததாக தெரிவித்தார்.

மேலும் கூறிய அவர் இன்னும் நிறைய துப்பட்டிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் எனவும் பிள்ளைகளுக்கு ஆரம்ப கல்வியை மார்க்க கல்வியுடன் இணைத்து கொண்டு சென்றால் சாத்தியப்படுத்தலாம் என கூறினார்.

மேலும் துப்பட்டி களின் சிறப்புகளை விவரித்த அவர், இவர்கள் போன்ற நிறைய துப்பட்டிகள் ஆளுமைகளாக வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img