அதிரை நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணிக்கான கால அவகாசம் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருப்போர், அடையாள அட்டை இல்லாதோர் என அனைவரும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மேம்பாட்டு திட்டம், நலத்திட்ட உதவிகள் கிடைத்திட இந்த கணக்கெடுப்பு பேருதவியாக இருக்கும். இந்நிலையில், அதிரையில் தங்களுக்கு தெரிந்த மாற்றுத்திறனாளிகள் குறித்த தகவல்களை +91 9500293649, +91
7200364700 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் அரசு பணியாளர்கள் அவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!
அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.
மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...





