Tuesday, February 3, 2026

பூட்டிய அறைக்குள் அமர்ந்துக்கொண்டு வரியை கூட்டிய அதிரை திமுக! பதாகை ஏந்தி போராடிய பெண் கவுன்சிலர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகராட்சி எல்லையில் உள்ள வீடுகள், காலி மனைகளுக்கான வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பான நகர்மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக, SDPI, பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேட்சை உறுப்பினர்கள் இந்த வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். குறிப்பாக சொத்து வரி உயர்வுக்கு எதிராக SDPI 13வது வார்டு கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன் கையில் பதாகை ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தார்.

இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரசிடம் பேசிய பெனாசிரா அஜாருதீன், கொரோனா பேரீடரில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்த அதிரை மக்கள் தற்போது தான் மெல்ல மீண்டு வருவதாக கூறினார். இதையெல்லாம் பற்றி கவலைப்படாத அதிரை திமுக கவுன்சிலர்கள், அநியாய சொத்து வரி உயர்வுக்கு ஆதரவாக செயல்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், 50% முதல் 150% சதவீத வரி உயர்வு என்பது மக்களை கடுமையாக பாதிக்கும் என்றார். குறிப்பாக தற்போது ரூ.6000/- வரியாக செலுத்த கூடிய மக்கள், இனி 150% வரி உயர்வால் ரூ.15000/- வரி செலுத்த வேண்டும் என தெரிவித்தார். வரி உயர்வு குறித்து மக்களிடம் கருத்துக்களை கேட்காமல் தான்தோன்றிதனமாக திமுக செயல்படுவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img