Monday, February 2, 2026

அதிரையர்களை அலறவிட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவர்களின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா காலத்தில் வீட்டிற்குள் அடைப்பட்டிருந்த தங்களது குழந்தைகளை அமைதிபடுத்த பெற்றோர்கையில் எடுத்த ஸ்மார்ட் ஃபோன் எனும் ஆயுதம் மாணவர்களின் செயல் திறனிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சனியனே! என்ன நிம்மதியா தூங்கவிடு!! இந்த போனை எடுத்துக்கிட்டு தொல என்று கொரோனா லாக் டவுனில் பெற்றோர் செய்த செயல் நாளடைவில் அந்த குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கமாகவே மாறிவிட்டது. எதை பார்க்கிறோம் எதற்கு பார்க்கிறோம் என்று கூட தெரியாமல் ரீல்ஸ்களை ஸ்கோர்ல் செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதெல்லாம் தான் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எதிரொலித்திருக்கிறது. அதிரையை பொறுத்தவரை மாணவிகள் 97.5% தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். ஆனால் மாணவர்கள் வெறும் 80% மட்டுமே தேர்ச்சிக்கான எல்லையை தாண்டி உள்ளனர். இதில் பலர் ஜெஸ்ட் பாஸ்.

தேர்வுகளோ, மதிப்பெண்களோ எந்த ஒரு மாணவனின் எதிர்காலத்தையும் தீர்மானிக்காது என்பதில் மாற்றுகருத்தில்லை. அதேசமயம் ஸ்மார்ட் ஃபோன் வலைக்குள் சிக்கி தேர்ச்சியை தள்ளிபோடும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து பெற்றோரும் ஆசிரியர்களும் சிந்தித்தே ஆக வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img