Monday, December 1, 2025

சிங்கப்பூர் : ஸ்கூட் விமான கருத்தரங்கில் அதிரை MMS ஜஃபர் பங்கேற்பு! (படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

தென்னிந்திய விமான பயண பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளின் தீவிரம் காட்டியமைக்கு பாராட்டு !

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் மேலாளராக இருந்து வருபவர் நமதூர் MMS ஜஃபர்.

இவர் திருச்சி விமான நிலையத்தில் விமானங்கள் ஹேண்ட்லிங்,சுகாதாரம், பாதுக்காப்பு உள்ளிட்டவற்றை கூடுதலாக கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் ஸ்கூட் என்ற சிங்கப்பூரின் தனியார் விமான நிறுவனம் உலகளாவிய விமான நிலைய பாதுகாப்பு, ஹேண்ட்லிங் உள்ளிட்டவற்றை திறமையாக கையாளும் நபர்களை கவுரவிக்கும் வண்ணம் சிங்கப்பூரில் உள்ள தனியார் அரங்கில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் தென்னிந்திய அளவில் சிறப்பான ஆளுமை என்ற அடிப்படையில் நமதூரை சார்ந்த MMS ஜஃபர் அழைக்கப்பட்டார்.

அழைப்பின் பேரில் சிங்கப்பூர் சென்ற அவர் தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை பயன்படுத்தி இளைஞர்கள் உத்வேகத்துடன் செயலாற்ற வேண்டும் எனவும் இன்னும் சில ஆண்டுகளில் விமான சேவை என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும் சூழல் உருவாகி உள்ளதாக தெரிவித்தார்.

இத்தகைய பணிகளுக்கு இளைஞர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் எனவும்,கவுரவமான பணிகளை நாடி நாம் எங்கும் செல்ல தேவையில்ல என்றும் அத்தகைய பணிகள் தாமாகவே நம்மை வந்தடையும் என்றார்.

முன்னதாக சிங்கப்பூர் வாழ் அதிரையர்களை சந்தித்த அவர் நமதூரின் அடிப்படை தேவைகளை நமது அதிராம்பட்டினம் நகராட்சி மூலமாக படிப்படியாக செய்து வருவதாகவும் இதற்கு பொதுமக்கள் வெகுவாக ஒத்துழைப்பு நல்கி வருவதாக கூறியுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img