Wednesday, March 18, 2026

அதிரை 2வது வார்டில் போர்க்கால அடிப்படையில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகராட்சிக்கு அதிக வரி வருவாய் தரக்கூடிய வார்டாக 2வது வார்டு கருதபடுகிறது. ஆனாலும் இந்த வார்டு சாலை மற்றும் வடிகால் வசதிகளின்றி தனி ஊராட்சி போல் காட்சி அளிக்கிறது. நகராட்சி நிர்வாகம் 2வது வார்டை தொடர்ந்து புறந்தள்ளி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் தனது வார்டு மக்களின் நலனுக்காக எம்.எல்.ஏ, அமைச்சர்களை சந்தித்து சில வளர்ச்சி திட்டங்களை கவுன்சிலர் சித்தி ஆயிஷா எஸ்.எச்.அஸ்லம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நகராட்சி ஆணையரிடம் அந்த வார்டின் கவுன்சிலர் சித்தி ஆயிஷா எஸ்.எச்.அஸ்லம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு அதிக வரி வருவாய் தரக்கூடிய அதன் 2வது வார்டில் பெரும்பாலும் மணல் சாலைகள் மட்டுமே உள்ளன. கழிவுநீர் வடிகால் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளும் இங்கு அறவேயில்லை. இதனால் 2வது வார்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் சூழல் உள்ளது. குறிப்பாக மழை பெய்யக்கூடிய சமயத்தில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் அங்குள்ள சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடுகின்றது. எனவே அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டில் போர்க்கால அடிப்படையில் சாலை, கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டை தயார் செய்து உடனடியாக பணிகளை துவங்கி 2வது வார்டு மக்களின் குறைகளை தீர்த்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை முன்னாள் சேர்மனும் திமுக மாவட்ட பொருளாளருமான எஸ்.எச்.அஸ்லம், திமுக மாவட்ட சிறுபான்மை உரிமை பிரிவு தலைவர் அதிரை ஜமாலுதீன் உள்ளிட்டோர் ஆணையர் சித்ரா சோனியாவிடம் நேரில் வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img