Tuesday, March 10, 2026

தமிழக மக்களுக்கு நற்செய்தி: அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகமான, எஸ்.இ.டி.சி., பஸ்களின் கட்டணத்தை குறைப்பது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

எஸ்.இ.டி.சி.,யில், 1,000த்துக்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இவை, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கும் இயக்கப்படுகின்றன. அதனால் தினமும், 1.8 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்தது. ஜன., 20 முதல், அரசு விரைவு பஸ்களின் கட்டணம், ஆம்னி பஸ்களுக்கு இணையாக உயர்த்தப்பட்டது.
இதன் காரணமாக, குடும்பத்துடன் வெளியூர் செல்வோர், ரயில், வாடகை கார்களை தேர்ந்தெடுத்தனர். கட்டண உயர்வால், தினமும் ஒரு கோடி ரூபாய் கூட வசூலாகாத நிலை ஏற்பட்டது. எனவே, கோடை விடுமுறையை கருத்தில் கொண்டும், பயணியரை தக்க வைத்துக்கொள்ளவும், கட்டணத்தை சற்று குறைக்க, அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

கோடை காலத்தில் பயணியர் வருகை அதிகரிக்கும்; வருவாயும் கூடும் என்பதால், கட்டணத்தை குறைக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img