Sunday, February 1, 2026

பேராவூரணி~பட்டுக்கோட்டை செல்லும் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அலுவரிடன் கோரிக்கை..!!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்:- பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் காட்டாற்று பாலத்தில் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு காட்டாற்று பாலம் உள்ளது. இந்த பாலத்தில் ஆங்காங்கே சிறுசிறு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது எதிரே வருகின்ற வாகனங்களுக்காக ஒதுங்கும்போது பள்ளத்தில் விழுவதும், தவறி பாலத்திற்குள் விழுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் மக்கள் படுகாயமடைகின்றனர்.போக்குவரத்து அதிகமான இந்த பாதையில் நீண்ட நாட்களாக பாலத்தில் உள்ள பள்ளம் மூடப்படாமல் உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக பாலத்தில் உள்ள சிறுசிறு பள்ளங்களை மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச்செயலாளர் ஏ.வி.குமாரசாமி, நெடுஞ்சாலை துறை அலுவலர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img