Thursday, February 5, 2026

அதிரை லயன்ஸ் சங்கம் நடத்திய மாணவர்களுக்கான தலைமைப்பண்பு பயிலரங்கம் ![படங்கள்]

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் இம்மாதம் 17ஆம் தேதி முதல் தொடர் சேவை திட்டங்களை செய்து வருகிறது. அதன் 9வது நிகழ்வாக அதிரையை அடுத்த ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக கலையரங்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கான தலைமைப்பண்பு பயிலரங்கம் இன்று 27.09.2018 வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அதிரை லயன்ஸ் சங்க தலைவர் பேரா.எம்.ஏ.அப்துல்காதர் தலைமை வகித்தார். கல்லூரியின் இயந்திரவியல் துறைத்தலைவர் பேரா.கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தினார். காதிர்முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே.செய்யது அகமதுகபீர் பயிலரங்கின் பயிற்றுனராக சிறப்புரையாற்றினார்.

விழாவில் 300 க்கும் மேற்ப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். விழாவில் லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் சூப்பர் அப்துல்ரஹ்மான், அப்துல்ஜலில்தீன், சாராஅகமது ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக லயன் ஆறுமுகசாமி நன்றி கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img