Thursday, February 5, 2026

தஞ்சை மாவட்டத்தில் ஜன 10 முதல் மார்ச் 21 வரை சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் 10.01.2019 முதல் 21.03.2019 வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான பொதுக் காலக் கடன் திட்டம்/தனி நபர் கடன் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் முகாம் 10.01.2019 அன்று தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 24.01.2019 அன்று திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்திலும், 31.01.2019 அன்று பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 07.02.2019 அன்று ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்திலும், 14.02.2019 அன்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 21.02.2019 அன்று பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 28.02.2019 அன்று பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 07.03.2019 அன்று கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 14.03.2019 அன்று திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 21.03.2019 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் சிறுபான்மையினர் 18 வயது பூர்த்தியடைந்தவர்களாகவும், கிராமப்புறங்களில் வசிப்பவராகயிருப்பின் ஆண்டு வருமானம் ரூ.81,000க்குள்ளும், நகர்ப்புறங்களில் வசிப்பவராகயிருப்பின் ஆண்டு வருமானம் ரூ.1,03,000க்குள்ளும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். சுய உதவி குழுக்களுக்கான கடன் பெறும் திட்டத்தின் கீழ் பயன் பெற குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மேலும், மகளிர் திட்ட அலுவலரால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img