Sunday, February 1, 2026

பட்டுக்கோட்டை-திருவாரூர் ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்~மத்திய ரயில்வே அமைச்சரிடம் நேரில் கோரிக்கை மனு !

spot_imgspot_imgspot_imgspot_img

காரைக்குடி – திருவாரூர் இடையேயான ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 5 வருடங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையே நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து மார்ச் 15ம் தேதிக்குள் CRS நடத்திட வேண்டும் என கோரி டெல்லியில் உள்ள நாடாளுமன்ற ரயில்வே பவனில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயலைச் சந்தித்து தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் கு. பரசுராமன் தலைமையில் அதிரை தன்னார்வலர்கள் M.S. சகாபுதீன் மற்றும் A. அப்துல் ரஜாக் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், மார்ச் மாதம் 30ம் தேதிக்குள் CRS நடைபெற நடவடிக்கை எடுப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து திருவாரூர்-காரைக்குடி இடையே முழுமையாக ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img