Tuesday, March 24, 2026

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி : முறிந்த நிலையில் இருந்த மின்கம்பம் அகற்றம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் கஜா புயலின் போது முழுமையாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்வாரியம் சார்பில் மாற்றி அமைக்கப்பட்டன.

இந்நிலையில் அதிரை ஆஸ்பத்திரி தெரு அரசு மருத்துவமனைக்கு அருகாமையில் மேல் பகுதி முறிந்த நிலையில் மின்கம்பம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

அவ்வழியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் சென்று வருவதாகவும், அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளதால் அதனை அதிரை மின்வாரியம் சீரமைக்க வேண்டும் என நமது அதிரை எக்ஸ்பிரஸில் நேற்று (25.02.2019) செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதனைத் தொடர்ந்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலியாக இன்று(26.02.2019) அதிரை மின்வாரியம் சார்பில் முறிந்து விழும் நிலையில் இருந்த அந்த மின்கம்பம் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டது.

விரைவாக செயல்பட்டு துரித நடவடிக்கை எடுத்த அதிரை மின்வாரியத்திற்கு அதிரை எக்ஸ்பிரஸின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

நேற்று முறிந்த நிலையில் இருந்தபோது : 

இன்று சீரமைப்பு பணி நடந்தபோது :

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img