Monday, March 23, 2026

PFI சார்பாக கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனரமைக்கப்பட்ட வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

கஜா புயலால் பாதிப்படைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் புணரமைக்கப்பட்ட 107 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அதிரை பவித்ரா திருமண மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(08.03.2019) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஏ. ஹாஜா அலாவுதீன் தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்டத் தலைவர் ஏ. ராஜ் முகம்மது வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் PFI ன் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில், மாநில பொதுச்செயலாளர் A. ஹாலித் முகமது ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பின்னர் கஜாவால் பாதிக்கப்பட்டு புணரமைக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும் கஜா புயலின் போது சிறப்பாக களப்பணியாற்றியவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

இறுதியாக PFI ன் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் M. சேக் அஜ்மல் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஜமாத்தார்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img