Friday, February 6, 2026

அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கீடு !

spot_imgspot_imgspot_imgspot_img

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமமுக வுடன் எஸ்டிபிஐ கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. அமமுக கூட்டணியில் ஏற்கனவே எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது எந்த தொகுதி ஐம்பது பின்னர் அறிவிக்கப்படும் என அப்போது இரு கட்சித் தலைவர்களும் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

மத்திய சென்னை தொகுதி என்பது இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதியாகும். இதனால் தான் எஸ்டிபிஐ கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்குட்பட்ட சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, துறைமுகம் என பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ளனர்.

மத்திய சென்னை திமுகவின் கோட்டையாக இருந்தாலும், ஒரு பக்கம் தயாநிதி மாறன், ஒரு பக்கம் எஸ்டிபிஐ, அதிமுக சார்பில் கோகுல இந்திரா போன்றோர் களமிறங்க உள்ளதாக தகவல் கசிகின்ற நிலையில், கமலின் மையமும் களமிறங்கினால் அங்கு பலமுனை போட்டி ஏற்படும்.

மத்திய சென்னையை கைப்பற்றப்போவது யார் ? என்ற கேள்விக்கு மே 23 தான் விடையளிக்க வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img