Sunday, March 22, 2026

கோவையில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டே கொல்லப்பட்டார் – பிரேத பரிசோதனையில் உறுதி !

spot_imgspot_imgspot_imgspot_img

கோவையில் 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அந்த மாணவி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென காணாமல் போனதால், அனைவரும் தேடியுள்ளனர்.

ஆனால் சிறுமி கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தடாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் போலீசாரும் உறவினர்களும் குழந்தையை தேடி வந்தனர். இரவு முழுவதும் குழந்தை கிடைக்காத நிலையில்,  நேற்று காலையில் குழந்தையின் பெற்றோரான கனபிரதீப்-வனிதா வீட்டிற்கு அருகே காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட சிறுமியின் உடலை காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில்  இன்று காலை வெளியான, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் 5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையில் கொலை பிரிவுடன், போஸ்கோ பிரிவையும் தடாகம் காவல் துறையினர் சேர்த்தனர். சந்தேகத்தின் பேரில் விஜயகுமார் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் குற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்யக் கோரி, தூடியலூர் பேருந்து நிலையம் முன்பு உறவினர்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img