Friday, February 6, 2026

அதிரை வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நாட்டின் 73-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு கிராம கல்வி குழுத்தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான முஹம்மது சரீஃப் தலைமை தாங்கினார். கிராம பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் S.K.M. ஹாஜா முகைதீன் தேசியக்கொடி ஏற்றினார். மேலும் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் நான்காம் இடம் பிடித்த பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவன் ஆதிஃப் அஹமதுவை பாராட்டி, கிராம கல்வி குழுத்தலைவர் முஹம்மது சரீஃப் சான்றிதழும், கேடயமும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் முஹம்மது இபுராஹீம், ஹனீஃபா, சாகுல் ஹமீது, Z. அப்துல் மாலிக் மற்றும் கிராம கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ் சிறப்பாக செய்திருந்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img