45
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நேற்றும் இன்றும் நடைபெற்றது.
அத்தொடரில் அதிரை BVC அணியும் பங்கேற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் அதிரை BVC அணியும் கட்டுமாவடி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அதிரை BVC அணி, கட்டுமாவடி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அதிரை BVC அணிக்கு முதல் பரிசும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.