Monday, December 1, 2025

நள்ளிரவில் லாரி ஓட்டுநர் வழிப்பறி கொள்ளையர்களால் தாக்குதல் மீட்ட தமுமுக – மமக வினர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

குற்றவாளிகளின் கூடாரம் என்பதை தொடர்ந்து நிரூபிக்கும் தஞ்சை மாநகரம்…

திருத்துறைப்பூண்டி எடையூறை சேர்ந்த லாரி ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் லாரியை ஓட்டி கொண்டு தஞ்சையை கடக்க முற்பட்ட பொழுது அசதியின் காரணமாக லாரியை சற்று ஓரங்கட்டினார் அதை கண்டு கொண்ட வழிப்பறி கும்பல் கிருஷ்ணமூர்த்தியை அரிவாள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தி துன்புறுத்தி விட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களை ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டு விட்டு அவரிடம் இருந்த 25000 ரூபாய் பணம் மற்றும் அலைபேசியை அபகரித்துச் சென்றுவிட்டனர். அவ்வழியாக தமுமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை I.M. பாதுஷா குவைத் மண்டல தலைவர் தஞ்சை I.பாரூக் மகராஜ் தமுமுக வின் ஊடகப் பிரிவின் மாநில துணைச் செயலாளர் நரியங்காடு பைசல் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர் தன்னந்தனியே நடு ரோட்டில் நள்ளிரவில் இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியை கண்ட தமுமுக – மமக நிர்வாகிகள் உடனே வாகனத்தை நிறுத்தி என்னவென்று விசாரித்தபோது அவர் தாக்குதலுக்கு உள்ளானதையும் அவர் பட்ட கஷ்டங்களையும் தெரிவித்தார் உடனே குவைத் மண்டல தலைவர் தஞ்சை I.பாரூக் மகராஜ் அவர்கள் அவசர கால ஊர்தியை வரவழைத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உடல்நலம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதுபோன்ற வழி வழிப்பறி கொள்ளைகள் தஞ்சையில் தொடர்ந்து நடைப்பெற்று கொண்டு தான் இருக்கிறது ஆனால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் வழக்கு பதிவு செய்யவோ, குற்ற செயல்களை செய்தவர்களை கைது செய்யவதிலோ காவல்துறை மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறது இதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும், மனிதநேய மக்கள் கட்சி யும் வண்மையாக கண்டிக்கிறது.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img