Thursday, March 19, 2026

அதிரை : வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்து தமுமுக & மமக கண்டன ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பெண்கள் உள்ளிட்ட பலர் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

அதன் ஒரு பகுதியாக இன்று காலை அதிராம்பட்டினத்தில் தமுமுக மற்றும் மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிரை தக்வா பள்ளியில் இருந்து பேரணியாக புறப்பட்டு பழைய போஸ்ட் ஆஃபீஸ் சாலை வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்தனர். பின்னர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மதுக்கூர் ஷேக் தாவூது தலைமை தாங்கினார். அதிரை அனைத்து ஜமாஅத்தினர் முன்னிலை வகித்தனர். மமக-வின் மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஜெய்னுல் ஆபிதீன் கண்டன உரையாற்றினார்.

இதில் ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், CAA NRC NPR சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img