Monday, March 30, 2026

அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாகனங்களை பயன்படுத்த தடை… காவல்துறை அதிரடி !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளவரை அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் வெளியே நடந்து செல்ல பச்சை, ஊதா மற்றும் ரோஸ் ஆகிய மூன்று வண்ணங்களில் அனுமதி அட்டை விநியோகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனுமதி அட்டையின்படி பச்சை நிற அட்டையை திங்கள் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கும், ஊதா நிற அட்டையை செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கும் மற்றும் ரோஸ் நிற அட்டையை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனுமதி அட்டையை நடந்து சென்று மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க பயன்படுத்த வேண்டும், வாகனங்களில் செல்ல கூடாது. மேலும் அத்தியாவசிய பணிகள் மற்றும் தவிர்க்க இயலாத கரணங்களாக இருந்தால் மட்டுமே வாகனங்களில் செல்ல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி அட்டையினை பெற்று பயன்படுத்த வேண்டும். எனவே விநியோகம் செய்யப்பட்டுள்ள வண்ண அனுமதி அட்டையினை நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வேண்டும் என மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு...

அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30,...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...
spot_imgspot_imgspot_imgspot_img