Sunday, March 29, 2026

நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வை எதிர்த்து திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 5 மாதங்களுக்கு இன்று திங்கட்கிழமை தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தொடரை இன்று முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் கொரோனா பிரச்சினை, லடாக் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் வரிந்து கட்ட திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்காக இன்று வருகை தந்த திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக எம்.பி.க்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் நீட் தேர்வுக்கு எதிரான வாசகத்துடன் கூடிய மாஸ்க்கை அணிந்தும் புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு ஆகியவற்றை திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீட் தேர்வை கைவிட வலியுறுத்தும் பதாகைகளையும் எம்.பி.க்கள் கைகளில் ஏந்தி இருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன்...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில்...

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை...
spot_imgspot_imgspot_imgspot_img