அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை சார்பிலும் கலந்து பேசுவார்த்தையில் அதிரை கல்வி அறக்கட்டையின் வேண்டுகோளுக்கிணங்க சுமுக முடிவு எட்டப்பட்டதால்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் பழைய நிலையிலையே தொடரும் என அறிவிக்கபட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்தால் வைக்கப்பட்ட சீல் மற்றும் அறிவிப்பு பதாகைகல் நீக்கப்படும் என நகராட்சி தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இன்று மீண்டும் பள்ளி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போராட்டங்களை நிறுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.