Friday, March 27, 2026

அதிரை நகராட்சி: 6ஆம் தேதி வருகிறதா அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

spot_imgspot_imgspot_imgspot_img

தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்து வந்த அதிராம்பட்டிணம் நிர்வாகத்தை தரம் உயர்த்தி, நகரார்ட்சியாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார்.

இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் நகராட்சியாக மாற்றும் பணிகளை முடுக்கிவிட்டது. அதன் ஒருபகுதியாக, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் சாதகபாதகங்கள் குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதில் அக்கம்பக்க கிராமங்களை இணப்பது குறித்து விவாதிக்கப்பட்டு அரசு ஒரு முடிவுக்கு வந்து விட்டது.

இந்த நிலையில் இன்றுகாலை அதிரைக்கு விஜயம் செய்த மாவட்ட ஆட்சியர்,பேரூராட்சி அதிகாரிகளுடன் புதிய நகர கட்டமைப்பு அலுவலக நிர்வாகம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது விரைவில் மாற்றமாக இருக்கும் அதிராம்பட்டிணம் நகராட்சி குறித்து ஆய்வு செய்ததுடன் கோப்புகளையும் பார்வையிட்டார்.

நகராட்சிக்கான ப்ணிகள் துரிதகதியில் நடந்துவருகிறதை ஒப்பிட்டு பார்க்கும்போது அடுத்தமாதம் ஆறாம் திகதியன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img