Friday, March 27, 2026

விடுதலை எப்போது? விடியலின் தலைவரை சந்தித்த சமுதாய தலைவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக சிறைகளில் உள்ள 700 கைதிகளை அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலைக்கு வழிவகை செய்யும் அரசாணையை சமீபத்தில் அரசு வெளியிட்டது.

அதில் இஸ்லாமிய சிறைவாசிகளும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை தகர்த்து உள்ளதாக இஸ்லாமிய தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையில் அரசு பாரபட்சம் கூட்டுகிறது என நெட்டிசன்கள் எழுதி வருகிறார்கள்.

இதனால் திமுக அரசுக்கு ஆதரவு அளித்த இஸ்லாமிய கட்சிகளுக்கு நெருக்கடி நீடித்தது.

இதனால் களத்தில் இறங்கிய அனைத்து இஸ்லாமிய கட்சிகள், இயக்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஒன்று கூடி முதல்வரை சந்திப்பது என்ற முடிவின் அடிப்படையில், முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

சுமார் 15 நிமிடம் வரை நீடித்த இச்சந்திப்பின் போது இஸ்லாமிய சமூகத்தின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்து உள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்து உள்ளார்.

மக்கள் நலன் காக்கும் இந்த அரசில் இஸ்லாமியர்களுக்கு விடுதலை இல்லையெனில் எப்போதும் இல்லை என்ற மன நிலையில் சிறுபான்மை இஸ்லாமிய சமூகம் மிகவும் எதிர்பார்ப்பதாக சந்திப்பின் போது எடுத்துரைத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img