Sunday, February 1, 2026

அவசர கதியில் அதிரை நகராட்சி வார்டு மறுவரையறை! விடுமுறை தினத்தில் அறிவிப்பை வெளியிட்ட பலே அதிகாரிகள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் N M ஷேக் தாவூத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக உயர்த்தப்பட்டபின் வார்டுகள் வரையறை செய்யப்படுவதாக தகவல் வந்தது. வார்டு வரைறை சம்பந்தமாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி இரகசியமாக நடத்தப்பட்டதோடு, விடுமுறை நாளான நேற்று நகராட்சி அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வார்டு வரையறை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதிலளிக்காமல் மெளனம் காத்துவிட்டு தற்போது அவசர கதியில் இன்று (20.12.2021) காலை திருச்சியில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என இன்றைய செய்தித்தாளில் அறிக்கை வெளியிட்டிருப்பதும் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததை காட்டுகிறது.

இது முற்றிலும் மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமான செயலாகும்.

ஆகவே இன்று நடைபெறுவதாக அறிவித்துள்ள கூட்டத்தை வேறு தேதியில் தஞ்சாவூரில் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img