அதிரை நகராட்சியில் மக்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதிகளில் மேலத்தெரு மிகவும் முக்கியமானதாகும். இந்நிலையில், அங்கு குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து கழிவுநீர் கலந்த குடிநீரை பாட்டில்களில் அடைத்து அதிரை நகராட்சி ஆணையரிடம் எஸ்.டி.பி.ஐ சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று பொதுமக்களை அச்சுறுத்தும் சூழலில் நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பது பேராபத்தாக கருதப்படுகிறது.
அதிரையில் குடிநீருக்கு பதிலாக கழிவுநீர் விநியோகம்! பேராபத்தில் மக்களின் உயிர்!! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?
More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...





