96
அதிரை நகராட்சியில் மக்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதிகளில் மேலத்தெரு மிகவும் முக்கியமானதாகும். இந்நிலையில், அங்கு குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து கழிவுநீர் கலந்த குடிநீரை பாட்டில்களில் அடைத்து அதிரை நகராட்சி ஆணையரிடம் எஸ்.டி.பி.ஐ சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று பொதுமக்களை அச்சுறுத்தும் சூழலில் நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பது பேராபத்தாக கருதப்படுகிறது.