கூட்டணியில் திமுகவுக்கு அடுத்து பெரிய கட்சியாக காங்கிரஸ் திகழ்கிறது. இந்த சூழலில் நடைபெற கூடிய அதிரை நகராட்சி தேர்தலில் தங்களுக்கான உரிய வார்டுகளை ஒதுக்காததால் அதிருப்தியடைந்த உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள், 10 வார்டுகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பிற தோழமை கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தையை நகர காங்கிரஸ் கமிட்டி முன்னெடுத்துள்ளது. புதிதாக காங்கிரஸ் அமைக்கும் கூட்டணியால் திமுக கொட்டகையில் உள்ள நிர்வாகிகள் குறித்த புகார் தலைமைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 5 வார்டுகளை கேட்ட முஸ்லிம் லீக்கிற்கு வெறும் ஒரு வார்டை மட்டுமே திமுக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
More like this
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...






