48
கூட்டணியில் திமுகவுக்கு அடுத்து பெரிய கட்சியாக காங்கிரஸ் திகழ்கிறது. இந்த சூழலில் நடைபெற கூடிய அதிரை நகராட்சி தேர்தலில் தங்களுக்கான உரிய வார்டுகளை ஒதுக்காததால் அதிருப்தியடைந்த உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள், 10 வார்டுகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பிற தோழமை கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தையை நகர காங்கிரஸ் கமிட்டி முன்னெடுத்துள்ளது. புதிதாக காங்கிரஸ் அமைக்கும் கூட்டணியால் திமுக கொட்டகையில் உள்ள நிர்வாகிகள் குறித்த புகார் தலைமைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 5 வார்டுகளை கேட்ட முஸ்லிம் லீக்கிற்கு வெறும் ஒரு வார்டை மட்டுமே திமுக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.