அதிரை நகராட்சி தேர்தலில் 23வது வார்டில் ஒன்றுபட்ட சமூதாய கூட்டமைப்பு, மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆதரவு பெற்று SDPI சார்பில் வைரம் சின்னத்தில் செ. முகமது ஜாவித் போட்டியிடுகிறார். CAA எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்தது, கஜா புயல் பேரழிவு, கொரோனா கால ஊரடங்கு சமயங்களில் மக்களுக்கு வேண்டியவற்றை முன்னின்று செய்தது போன்றவற்றால் 21 வயதேயான அவருக்கு நடப்பு நகராட்சி தேர்தலில் போட்டியிட SDPI வாய்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் அதிரை நகராட்சி தேர்தலில் போட்டியிடும் மிக இளம் வயது வேட்பாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...





