Thursday, March 26, 2026

அதிரை: காலாவதியான மோட்டார்களை கழற்றி விடுங்கள் – ஊழியர்களுக்கு உத்தரவிட்ட தலைவர், துணைத்தலைவர் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு என அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் பொருத்தப்பட்ட நீர் மூழ்கி மோட்டார்கள் மற்றும் இதர இயந்திரங்களின் திறன் காலாவதியாகி விட்டது.

இதனால் அவ்வப்போது மேல்னிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்ய இடையூறு ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் இடையூறு ஏற்படுத்தியதின் விளைவாக இன்று நகரின் பல பகுதிகளுக்கு நீர் வினியோகம் செய்யப் படவில்லை.

எதிர் வரும் ரமலானை கருத்திற்கொண்டு தடையில்லா நீர் வினியோகம் செய்ய ஏதுவாக பழைய மின் மோட்டார்கள் உதிரி பாகங்களை அகற்றிவிட்டு புதிதாக மாற்றிட வழிவகை செய்யப்படும் என நகர தலைவர் துணை தலைவர் கூறியள்ளனர்.

அதன்படி இன்று நீரேற்றம் நிலையத்தை ஆய்வு செய்த துணை தலைவர் இராம குணசேகரன், பழைய மின் மோட்டர்களை உடனடியாக அகற்றிவிட்டு புதிய மின் மோட்டார்களை பொறுத்த அதிகாரிகளை கேட்டு கொண்டார்.

இதனால் ஏற்படும் இடையூறுகளை பொதுமக்கள் பொறுத்து கொள்ள வேண்டும் எனவும், இடைப்பட்ட காலத்தில் வழங்கப்படும் நீரை நன்கு காய்ச்சி வடிகட்டி பருக வேண்டும் என நகர தலைவர் தாஹிரா அம்மாள் மற்றும் துணை தலைவர் இராம குண்சேகரன் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின் போது ஒன்றிய திமுக சிறுபான்மையினர் அணி செயலாளர் மரைக்கா கே இத்ரஸ் அகமது உடனிருந்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img