Monday, May 20, 2024

ஏண் என்ற கேள்வி! அதிரை நகராட்சி பெயர் பலகைகளில் அல்லல்படும் தமிழ்!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி ஆவணங்களில் தொடர்ச்சியாக பிழையான தகவல்களும் எழுத்துப்பிழைகளும் அதிகளவில் தென்படுகிறது. குறிப்பாக ரூ.4.42கோடி மதிப்பிலான டெண்டர் ஆவணத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தை மதுரை மாவட்டம் என குறிப்பிட்டது சமீபத்தில் பேசும் பொருளானது. இந்நிலையில் தற்போது அதிரை வீதிகளில் வைக்கப்பட்டு வரும் பெயர் பலகைகளில் செந்தமிழ் சின்னாபின்னமாகி வருகிறது.

பெயர் பலகைகளில் இடம்பெற கூடிய வார்டு எண் என்பதற்கு பதிலாக வார்டு ஏண் என எழுதி பொதுமக்களை குழப்பமடைய செய்திருக்கிறது நகராட்சி. அதாவது வார்டு எதற்கு (ஏன்?) என அதிரை நகராட்சி கேள்வி எழுப்பும் வகையில் அந்த பெயர் பலகைகள் இருப்பதாக மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக அதிரை நகராட்சி நிர்வாகம் சரிவர இயங்காததின் வெளிப்பாடே இத்தகைய பிழைகளுக்கு காரணம் என்று வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள், உடனடியாக இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கவனக்குறைவால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதற்கு முன் தகுதிவாய்ந்த அலுவலர்களை அதிரை நகராட்சியில் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...