Saturday, April 4, 2026

அதிரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் அமைதி காக்க வேண்டும்!! எம்எல்ஏ வலியுறுத்தல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உதுப்பினருமான கா. அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அதிராம்பட்டினம் நகராட்சியில் நகராட்சியை சுற்றியுள்ள மழவேனிற்காடு, நரசிங்கபுரம், ஏரிப்புறக்கரை, மகிழங்கோட்டை மற்றும் தொக்காலிக்காடு ஆகிய ஊராட்சிகளின் சில பகுதிகளை இணைப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் அந்த ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் (நேற்று) அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.

பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கண்ட ஊராட் சிகளில் உள்ள பொதுமக்களின் உணர்வுகளுக்கு நிச்சயம் மதிப்பளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக தனது அறிக்கையில் எம்.எல்.ஏ குறிப்பிட்டு இருக்கிறார்.

ஊராட்சி மன்றங்களின் தீர்மானம் இல்லாமலோ, பொதுமக்களின் கருத்து கேட்காமலோ அரசு எந்த முடிவும் எடுக்காது என்பதை தெரிவித்துக் கொள்வதோடு அது வரை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் அமைதி காக்க கேட்டுக்கொள்வதாக கா.அண்ணாத்துரை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது – நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட...

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் நகரில் தேர்தல் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி...

பாபநாசம், வாணியம்பாடி முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அதிரை...

​அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் Z. முகம்மது தம்பி தலைமையில் நடைபெற்றது....

தேர்தல் ஆணையமே ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்து –...

100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க...
spot_imgspot_imgspot_imgspot_img