Wednesday, March 18, 2026

அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் முழுமையான இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் இன்று புதன்கிழமை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இம்முகாமை தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா. அண்ணாதுரை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். லயன்ஸ் சங்க தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆளுநர் MJF Lion. JKR. முருகன் வாழ்த்துரை வழங்கினார்.

இம்முகாமை லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் Ln. அப்துல் ஜலீல், Ln. ஆரிப், Ln. அபு பக்கர், Ln. முஜம்மீல் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், சுமார் 80 நபர்களுக்கு கண்புரை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் இலவச கண்புரை நீக்க அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இம்முகாமில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க தலைவர் Ln. குப்பாஷா M. அஹமது கபீர், செயலாளர் Ln. M. ஹாஜா நசுருதீன், பொருளாளர் Ln. Dr. M. நியாஸ் அஹமது, லயன்ஸ் சங்க முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img