Wednesday, March 18, 2026

அதிரையில் புதிய பள்ளிக்கூட கட்டிடத்தை திறந்து வைத்த முதலமைச்சர்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் நூற்றாண்டு பழமையான  சூனா வீட்டு பள்ளி என்கிற ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் படிக்க கூடிய இந்த பள்ளியில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என்று அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இப்பள்ளிக்கு ரூ.94.89லட்சம் மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணி சமீபத்தில் துவங்கியது.

இதனையடுத்து கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் சென்னையிலிருந்து திறந்து வைத்தார்.  பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும் மேற்கு நகர திமுக பொறுப்பாளருமான S.H.அஸ்லம், ஊராட்சி ஒன்றிய தலைவர் பழனிவேல், வட்டார கல்வி அலுவலர் மீனா சுந்தரி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக திறப்பு விழாவுக்கு வருகைதந்த அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்செல்வி வரவேற்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...
spot_imgspot_imgspot_imgspot_img