திருவண்ணாமலை: தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு கடந்த 2012 முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்து தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறை தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு வரும் மார்ச் 16 முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வை வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதனால் செய்முறை தேர்வு நடத்துவதற்கான பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்
More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...
கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய பாடத்திட்டங்கள்:
அல்-குர்ஆன்...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!
அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர்.
முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்:
01.07.2025 முதல் 15.07.2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...





