Sunday, February 1, 2026

“எக்ஸ்பிரஸ் சமையல்”அருமையான முட்டை மஞ்சூரியன் செய்வது எப்படி..!!

spot_imgspot_imgspot_imgspot_img

எக்ஸ்பிரஸ் சமையல் அருமையான முட்டை மஞ்சுரியன் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:-

முட்டை – 4
மிளகு தூள் –
உப்பு – தேவையான அளவு,
மைதா – கால் கப்
சோள மாவு – கால் கப் + 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
பொடியாக நறுக்கி இஞ்சி – 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கி பூண்டு – 1 ஸ்பூன்
வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1
சில்லி சாஸ் – 2 ஸ்பூன்
tomato ketchup – 2 ஸ்பூன்,
சோயா சாஸ் – 1 ஸ்பூன்,
வெங்காயத்தாள் – சிறிதளவு.

செய்முறை:-

குடைமிளகாய், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

1 ஸ்பூன் சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்

பின்னர்  சிறிது எண்ணெய் தடவிய அகன்ற கிண்ணத்தில் அடித்து வைத்த முட்டையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

வெந்ததும் எடுத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோளமாவு, மிளகாய் தூள், சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து அதில் முட்டை துண்டுகளை போட்டு பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டை போட்டு வதக்கவும்.

இரண்டும் நன்றாக வதங்கியதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

அடுத்து குடைமிளகாயை போட்டு வதக்கவும்.

அடுத்து சில்லி சாஸ், tomato ketchup, சோயா சாஸ் போட்டு நன்றாக கிளறவும்.

அடுத்து கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி திக்கான பதம் வந்தவுடன் பொரித்து வைத்துள்ள முட்டையை போட்டு உடையாமல் கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

முட்டை மஞ்சூரியன் ரெடி.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கேஸ் சிலிண்டர் விண்ணப்பிக்க இனி அட்ரஸ் புருஃப் தேவையில்லை- ராதாகிருஷ்னன் IAS

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தோடு இணைந்து மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது....

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி தொடர்பான அறிவிப்பு!

அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் கடந்த 23.03.2022 அன்று வெளியான "கோல்டு வின்னர் ஆயில் நிறுவனம் அதிரை காரரோடதா?" என்ற செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள்...

எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கும் முட்டை!

முட்டை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகின்றன. ஒமேகா -3 மற்றும் புரத சத்து நிறைந்த முட்டைகள் நல்ல ஆரோக்கியத்தையும் உடல்தகுதியையும் தரவல்லது. ஒரு...
spot_imgspot_imgspot_imgspot_img