Sunday, February 1, 2026

தஞ்சையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் நடைபெற்ற ONGC எதிர்ப்பு முற்றுகை போராட்டம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே ONGCயின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று(27/03/2018) காலை சுமார் 11மணியளவில் தமிழக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ், SDPI கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில தலைவர் வேல்முருகன் மற்றும் கம்யூனிட்ஸ் கட்சி தலைவர்கள் , நாம் தமிழர் கட்சி தலைவர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தஞ்சை அம்மாப்பேட்டையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மாபெரும் ONGC முற்றுகை போராட்டத்திற்கு பல பகுதிகளில் இருந்து கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்திற்கு அதிரை நகர தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img