Sunday, February 1, 2026

தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றும் தீர்ப்பு..? இன்று வெளியாகும் அதிரடி அறிவிப்பு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

 
 

காவிரி விவகாரத்தில் இதற்கு பிறகு மேல் முறையீடு இல்லை என்று கூறி, இறுதி தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றமானது மார்ச் மாதம் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

 
ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை என கர்நாடகா தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து, மார்ச் 29 ஆம் தேதிக்கு பிறகும் மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் இதில் எடுக்கவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்ததை தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் “ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய ஒரு மனுவை தாக்கல் செய்தது.

மேலும் கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு அதில் தெரிவித்தது.

தமிழக அரசின் மனுவோடு, மத்திய அரசின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இரு வழக்குகளையும் இன்று (ஏப்ரல் 9) விசாரிப்பதாக தெரிவித்திருந்தது.
இது தொடர்பான முடிவுகள் இன்று வெளியாக இருப்பதால், இரு தரப்பிலும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img