Sunday, February 1, 2026

ஆசிபா குழந்தைக்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!அதிரை எக்ஸ்பிரஸ் அளித்த பிரத்தியோக பேட்டி!!

spot_imgspot_imgspot_imgspot_img

காஷ்மீரில் ஆசிபா என்ற 8வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆசிபாவிற்கு நீதி கேட்டு போராட்டங்களும் கண்டன ஆர்ப்பாட்டங்கலும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் ஆசிபா குழந்தைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் அதிரை நகர பொருளாளர் முனாப் அவர்கள் வரவேற்புரை வழங்கிய, இந்த ஆர்பாட்டத்திற்க்கு மீராசாகிப் அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் ராவனபிரபு, பட்டுக்கோட்டை தொகுதி செயலர் தேவராஜ், பட்டுகோட்டை தொகுதி இணை செயலாளர் சிவக்குமார், பட்டுக்கோட்டை நகர தலைவர் இமயராஜ், பட்டுகோட்டை நகர செயலாளர் கார்த்திக், பிரேம் சாமுவேல், முஹம்மது தம்பி, பஸீர் அஹமது, முத்து கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் ஜாமுன் ராஜிக், ஆசிரியர் ராஜேந்திரன், A.J.ஜியாவுதீன், சக்தி வேல், வைகதை ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img