ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வகைகள் மற்றும் அதன் விலை அடங்கிய ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, வட மாநிலங்களில், சதாப்தி, ராஜ்தானி போன்ற ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும். இந்த உணவு வகைகள் மற்றும் அதன் விலைகள் அடங்கிய விபரங்களை தெரிந்து கொள்ளும் விதமாக ”மெனு ஆன் ரயில்ஸ்” புதிய ஆப் ஒன்றை இந்தியன் ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் உருவாக்கியுள்ளது. இந்த ஆப் உருவாக்கப்பட்டு தற்போது சோதனை நிலையில் இருப்பதாகவும், விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
More like this
அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...
தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...
வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...