Sunday, February 1, 2026

அவசரத்திற்கு உதவாத அதிரை அரசு மருத்துவமனை !

spot_imgspot_imgspot_imgspot_img

 

இன்று இரவு அதிரை பகுதியில் சாலை விபத்தில் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த அடையாளம் தெரியாத இளைஞன் சிக்கினான்.

இவரை மீட்ட தன்னார்வ தொண்டர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அவரை பரிசோதனை செய்த செவிலியர் முதலுதவி மட்டும் செய்து அனுப்பி வைத்ததாகவும், விபத்தில் சிக்கிய இளைஞன் இரத்தப்போக்கு காரனமாக மயக்க நிலைக்கு சென்றார்.

இதனை கவனித்த தன்னார்வலர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

அதிரை அரசு மருத்துவமனையில் பல்வேறு சேவைகளை வழங்கினாலும், இரவு நேரத்தில் ஆபத்திற்கு உதவ மருத்துவர்கள் இருப்பதில்லை. நமதூருக்கு இரவு நேர மருத்துவர்களே முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், தேர்தல் காலங்களில் மட்டுமே அரசியல் வாதிகள் கையிலெடுக்கும் இப்பிரச்சனையை ஊர் மக்கள் வீரியமான போராட்டத்தினூடனே வென்றெடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img