Thursday, March 19, 2026

ஐபிஎல் 2018 சாம்பியன்ஸ் கோப்பையை தட்டிச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ..!

spot_imgspot_imgspot_imgspot_img

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தட்டியது சென்னை சூப்பர் கிங்க்ஸ்.

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று மும்பையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, வில்லியம்சன் 47, யூசுப் பதான் 45 ஆகியோரின் உதவியுடன் 178-6 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் கோப்பை, என்ற கனவுடன் களமிறங்கிய சென்னை அணியின் டு ப்ளசி 10, ரய்னா 32 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் அதிரடியாக ஆடிய சென்னை சிங்கம் வாட்சன் சிக்சரும், பவுண்டரியுமாக தெறிக்க விட்டு வாழ்நாள் இன்னிங்சை ஆடினார்.

51 பந்துகளில் சதம் கடந்து, கூலாக பைனலை சென்னை வசம் ஆக்கினார் வாட்சன். ராயுடு 12 ரன்கள் எடுத்து பக்கபலம் தந்தார்.

இறுதியில் 18.3 ஓவர்களில் 181-2 ரன்கள் எடுத்து இந்த ஆண்டு கோப்பையை வென்றது சென்னை அணி!

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img