Thursday, March 19, 2026

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி…!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக  வீழ்ச்சியடைந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 69ரூபாய் என்கிற நிலைக்கு சென்றது.

வங்கிகளும் இறக்குமதியாளர்களும் அமெரிக்க டாலரை அதிகமாக வாங்கி வருகின்றனர். பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்களும் அமெரிக்க டாலரை அதிக அளவில் வாங்கி வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே வருகிறது.

இந்நிலையில் இன்று காலையில் வணிகநேரம் தொடங்கியதுமே ரூபாய் மதிப்பு 28காசுகள் வீழ்ச்சியடைந்து இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக 68ரூபாய் 89காசுகளாக குறைந்தது. அடுத்த சில நிமிடங்களில் ரூபாய் மதிப்பு மேலும் 21காசுகள் வீழ்ச்சியடைந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 69ரூபாய் என்கிற அளவைத் தாண்டியது. மொத்தத்தில் இன்று ஒரேநாளில் 49காசுகள் சரிந்து 69ரூபாய் 10காசுகளாக இந்திய ரூபாயின் மதிப்பு இருந்தது. இதற்கு முன் ரூபாய் மதிப்பு 2016நவம்பர் 24ஆம் நாள் 68ரூபாய் 73காசுகளாக இருந்ததே மிகக் குறைந்த அளவாக இருந்தது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பணவீக்கத்துக்கும் விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும் எனப் பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img