Thursday, March 19, 2026

நான்கு ஆண்டுகளில் 52 நாடுகள் 355 கோடி! மோடியின் வெளிநாட்டு பயணம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

பிரதமர் மோடி கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு 355 கோடி ரூபாய் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பீமப்பா கடாட் என்பவர் பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு இதுவரை எவ்வளவு ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்ற கேள்வியை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.

இந்த கேள்வி தொடர்பாக பதிலளித்திருந்த பிரதமர் அலுவலகம் இதுவரை மோடியின் வெளிநாட்டு பயணத்திற்காக 355 கோடி செலவிடப்பட்டுள்ளது என பதிலளித்துள்ளது.

மேலும் அந்த பதிலில், இந்த நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 41 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு 52 நாடுகள் சுற்று பயணத்தை இதுவரை முடித்துள்ளார். மேலும் இந்த நான்கு ஆண்டுகளில் 165 நாட்கள் அவர் வெளிநாடுகளில் சுற்று பயணத்தில் இருந்துள்ளார். அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் 2015-ஆம் ஏப்ரல் மாதம் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்கு சென்ற வந்த சுற்றுப்பயண செலவு மட்டும் 31,25,78,00 ரூபாய். இதுவே அவரின் அதிகபட்ச சுற்றுப்பயண செலவு.

அதேபோல் 2014-ஆம் ஜூன் மாதம் மேற்கொண்ட பூட்டானுக்கு சென்றுவந்த செலவு மட்டும் 2,45,27,000 ரூபாய். இதுவே அவரது குறைந்தபட்ச சுற்றுப்பயண செலவு எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் உள்நாட்டு சுற்றுப்பயணங்கள் தெடர்பான தகவலை பிரதமர் அலுவலகம் தர மறுத்துவிட்டதாகவும் பீமப்பா கடாட் கூறியுள்ளார்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img