Wednesday, March 18, 2026

35 ஆண்டுகாலம் தாயகம் செல்ல தவித்தவரை தாயகத்திற்கு அனுப்பிய இந்தியன் சோசியல் ஃபோரம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

தஞ்சாவுர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த ஷேக் முஹம்மது இப்ராஹிம் 02.02.1983 ல் பஹ்ரனைக்கு வேலை செய்வதற்காக வந்தார் பிறகு கம்பேனியில் வேலை நீக்கம் செய்து அனுப்பிய போது சட்டத்திற்கு புறம்பான வகையில் நாட்டிற்கு செல்லாமல் விசாவின்றி பஹ்ரைனில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் வருடங்கள் உருண்டோடிட தாயகத்திற்கு செல்ல விரும்பிய ஷேக் அவர்கள் பாஸ்போர்ட் மற்றும் இந்திய குடிமகன் என்கின்ற எந்த ஆதாரமும் இல்லாமல் தாயகம் செல்ல முடியாமல் தவித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பஹ்ரைன் அமைப்புகள் மூலம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய மிகவும் வருத்திற்குள்ளாகி உடல் நிலையும் சரி இல்லாமல் போனது.

இறுதியாக தமிழகத்தை சேர்ந்த சிலரால் இவ்விஷயம் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் பஹ்ரைன் நிர்வாகிகள் கவனத்திற்கு வர அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்து மேலும் தாயகத்திற்கு செல்ல வேண்டிய அனைத்து முயற்சிகளையும் இந்திய தூதரகத்தின் துணையுடன் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் நிர்வாகிகள் மேற்கொண்டனர்.
இந்த முயற்சியில் நாட்டிற்கு செல்வதற்கான விமான டிக்கட் உட்பட் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி 35 வருடங்கள் கழித்து இன்று காலை 03.08.2018 சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாக வந்தடைந்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img