Saturday, September 13, 2025

திமுக தொண்டர்கள் என்பக்கமே உள்ளனர் ~ அழகிரி தடாலடி பேட்டி….!

spot_imgspot_imgspot_imgspot_img

மெரினாவிலுள்ள கருணாநிதி நினைவிடத்தில், மு.க.அழகிரி, தனது மனைவி, மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

எனது அப்பாவிடம் எனது ஆதங்கத்தை வேண்டிகிட்டு இருக்கேன். அந்த ஆதங்கம் என்ன என்பது இப்போது தெரியாது உங்களுக்கு. என்னுடைய தலைவர் கலைஞரின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் அனைவரும் என்பக்கம் உள்ளனர். தமிழகத்திலுள்ள அத்தனை விசுவாசிகளும் எனது பக்கம் உள்ளனர், என்னை ஆதரித்து கொண்டு இருக்கின்றனர். ஆகவே, இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும் என்பதோடு நான் நிறுத்திக்கொள்கிறேன் என்றார்.

உங்கள் ஆதங்கம் கட்சி தொடர்பானதா, குடும்பம் தொடர்பானதா என்ற நிருபர் கேள்விக்கு, கட்சி தொடர்பானதுதான் என்று அழகிரி பதில் அளித்தார். இதன் மூலம், திமுகவில் மீண்டும் உயர் பதவியோடு அழகிரி திரும்ப முயல்வதாக வெளியான செய்திகள், உண்மையாகியுள்ளன.

நாளை திமுக செயற்குழு கூட உள்ளதே என்ற நிருபர்கள் கேள்விக்கு, செயற்குழு பற்றி என்னிடம் கேட்காதீர்கள். அது பற்றி எனக்கு தெரியாது. நான் இப்போது திமுகவில் இல்லை என்பதால், அதுபற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்றார், அழகிரி.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img