Sunday, February 1, 2026

அதிரையில் லயன்ஸ்,CBD மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய சாலை விழிப்புணர்வு பிரச்சாரம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் காவல் துறை, கிரசெண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்புடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் (22/09/2018) இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் பேரா.எம்.ஏ . அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார்.

காவல் துறை சார்பு ஆய்வாளர் ராஜேஷ், கிரசெண்ட் பிளட் டோனர்ஸ் நகர செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரச்சாரம் சீட்டுகள் வழங்கப்பட்டது , 500 வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லைகள் ஒட்டப்பட்டன.

பேரூராட்சின் தெருக்கள் முழுவதும் ஒலிபெருக்கி மூலம் சாலை பாதுகாப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்யில் லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் அப்துர் ரஹ்மான், அப்துல் ஜலில், ஜலீலா முகைதீன் , சாகுல் ஹமீது, செல்வராசன் ,அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர்.

அதிராம்பட்டினம் சுற்றுசூழல் பொருப்பாளர்கள் விவேகானந்தம், முகமது சலீம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதிராம்பட்டினம் மற்றும் மதுக்கூர் கிரசெண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பின் சேர்ந்த 50க்கு மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் முடிவில் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் கா. செய்யது அஹமது கபீர் நன்றி கூறினார்.

 

 

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img